கோலாலம்பூர், மே 13-
டைரக்டர் ஜெனரலாக ஜூலினா ஜோஹன் பதவி ஏற்பு இன்று அமலுக்கு வந்துள்ளது.
புத்ரா மலேசியா பல்கலைக்கழகத்தில் கார்ப்பரேட் கம்யூனிகேஷனில் முதுகலை பட்டம் பெற்றவர், 1996 இல் அரசு ஊழியராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், அரசாங்க மக்கள் தொடர்புகள் மற்றும் மூலோபாய தகவல் தொடர்புத் துறையில் விரிவான அனுபவம் பெற்றவர்.
1945 ஆம் ஆண்டு முதல் மலேசிய தகவல் துறையின் (japen ) இயக்குநராக நியமிக்கப்பட்ட 8ஆவது தலைமை இயக்குநர் இவர் ஆவார். மேலும் 2ஆவது பெண் இயக்குநர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜூலினா (வயது 53) இதற்கு முன்னர் 2023 இல் மலேசிய தகவல் துறையின் துணை இயக்குநர் ஜெனரலாக (டிஜிட்டல் உள்ளடக்கம்) பதவி வகித்தார்.
மலேசிய கல்வி அமைச்சகம், பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், மத்திய பிரதேச அமைச்சகம் போன்ற பல அமைச்சகங்களில் பணியாற்றியுள்ளார்.
பெர்னாமா